சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

இந்திய படைகளின் தாக்குதலில் இருந்து பயங்கரவாதிகளை காக்கும் பாகிஸ்தான்: பெனாசிர் பூட்டோவின் மகன் சாடல் 

இந்திய படைகளின் தாக்குதலில் இருந்து பயங்கரவாதிகளை காக்கும் பணியை பாகிஸ்தான் அரசு செய்வதாக, மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவால் பூட்டோ தெரிவித்துள்ளார்.

Published On :

இஸ்லாமாபாத்: இந்திய படைகளின் தாக்குதலில் இருந்து பயங்கரவாதிகளை காக்கும் பணியை பாகிஸ்தான் அரசு செய்வதாக, மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவால் பூட்டோ தெரிவித்துள்ளார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

இந்நிலையில் இந்திய படைகளின் தாக்குதலில் இருந்து பயங்கரவாதிகளை காக்கும் பணியை பாகிஸ்தான் அரசு செய்வதாக, மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவால் பூட்டோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. ஆனால் இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. பதிலாக இந்திய போர் விமானங்களின் குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க அவர்கள் பாதுகாப்பான இடங்களில் பாகிஸ்தான் அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த விதத்தில் முடக்கப்பட்டுள்ளது. முஷரப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் என்ன ஆனது? அவர் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது இந்தியாவுடன் நடத்தப்பட்ட ய பேச்சு வார்த்தைக்கு துரோகம் இழைப்பதாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.