நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இருபத்தாறு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை குழநதைகள் பெற்ற அதிசய பெண் 

வங்கதேசத்தில் இளம்பெண் ஒருவர் இருபத்தாறு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை குழநதைகள் பெற்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2019, 2:49 pm

DIN

டாக்கா: வங்கதேசத்தில் இளம்பெண் ஒருவர் இருபத்தாறு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை குழநதைகள் பெற்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது.

வங்கதேசத்தின் ஜெஸ்சூர் மாவட்டம் சர்சா பகுதியில் உள்ளது ஷியாம்லாகாச்சி கிராமம். இங்கு ஆரிபா சுல்தானா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த இவருக்கு  கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, குல்னா நகர மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைபிரசவமாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

தொடர்ந்து வீட்டிலிருந்த அவருக்கு கடந்த 22 ஆம் தேதி மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது.  இதனை அடுத்து ஆரிபா உடனடியாக ஆதின்  என்ற இடத்தில உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அதிசயத்தக்க வகையில் அவருக்கு அறுவை சிகிச்சை வழியே பெண் மற்றும் ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இதுபற்றி குறிப்பிட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவரான ஷீலா பொடார் என்பவர் கூறியதாவது:

ஆரிபாவுக்கு இரண்டு கருப்பைகள் உள்ளன.  இதில் முதல் குழந்தை ஒரு கருப்பை வழியாக  பிறந்துள்ளது.  மற்றொரு கருப்பை வழியே தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

இது மிகவும் அரிய சம்பவம்.  இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவத்தினை நான் கேள்விப்பட்டது இல்லை. முதன்முறையாக இதுபோன்ற ஒரு சம்பவத்தினை நான் கேள்விப்படுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவத் துறை வரலாற்றில் இதுபோன்றதொரு நிகழ்வு மிக அரிதாக நடைபெறுவது உண்டு துறை சார் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.