கரோனா: பிரிட்டனில் பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது
பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது.


பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது வரை 26 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,87,618 பேரி பலியான நிலையில் 7,36,405 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது. கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்பை அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 24 மணி நேரத்தில் புதிதாக 4,583 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரிட்டனில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,38,078 ஆக உயர்ந்துள்ளது.
24 மணி நேரத்தில் 638 பேர் பலியாகியிருப்பதன் மூலம் அங்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 18,738 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...