கரோனா: கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் 600 பேரும், பிரிட்டனில் 768 பேரும் பலி
அமெரிக்காவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 600 பேர் பலியாகியுள்ளனர்.


அமெரிக்காவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 600 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் 210 நாடுகள் வரை பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், நோய்த்தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலகளவில் கரோனாவுக்கு இதுவரை 27,63,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,93,664-பேர் பலியாகியுள்ளனர்.
அதே நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 763,384 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில்தான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 600 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலி எண்ணிக்கை 50,836 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,277 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,90,719 உயர்ந்துள்ளது. இதேபோல் பிரிட்டனிலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 768 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலி எண்ணிக்கை 19,506ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,386 பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,43,464ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...