இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ரஷியாவில் புதிதாக 5,189 பேருக்கு கரோனா: 77 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 77 பேர் உயிரிழந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஆகஸ்ட் 2020, 10:00 am

DIN

மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 77 பேர் உயிரிழந்தனர்.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ரஷியாவிலும் கரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரஷியாவில் புதிதாக 5,189 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 8,87,536-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் 84 மாகாணங்களில் கரோனா பரவியுள்ளது. 1,382 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 77 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 14,931-ஆக அதிகரித்துள்ளது. அங்கு கரோனா பரவல் விகிதம் 0.6%-ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.