இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

உலகளவில் 2 கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்பு 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது. 

News image
கோப்புப் படம்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 5:49 am

DIN

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது. 

சீனாவின் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. அந்த வைரஸால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. 

இந்த நிலையில் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டிதுள்ளது. இதன்படி 2,00,24,263 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 733,995 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். தற்போது 63 லட்சத்து 91 ஆயிரத்து 516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 64 ஆயிரத்து 819 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தை நெருங்குகிறது. 

ஒரே நாளில் 525 பேர் பலியானதைத் தொடர்ந்து, அங்கு கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.65 லட்சத்தைக் கடந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.