சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மருத்துவமனையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே அவர் சென்றிருப்பதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

News image
மருத்துவமனைக்குச் சென்றார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே
Updated On :17 ஆகஸ்ட் 2020, 10:44 am

PTI


டோக்யோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே அவர் சென்றிருப்பதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், கடந்த சில மாதங்களாக ஷின்சோ அபேவின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்களால், அவரது உடல்நிலைப் பற்றிய சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.

கியோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஷின்சோ அபே காரில் செல்லும் விடியோ ஜப்பான் தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகின.

சமீபத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு அமைச்சர் அகிரா அமாரி, இந்த சமயத்தில் பணியில் இருந்து விடுமுறை எடுப்பதை குற்றமாக அபே கருதுகிறார். ஆனால், அவருக்கு ஓய்வு தேவை என்று குறிப்பிட்டிருந்தார்.

அதே சமயம், ஆண்டுக்கு இரண்டு முறை அபே மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனை சென்றிருப்பதாகவும் அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

65 வயதாகும் அபே, இதற்கு முன்பும் 2007-ஆம் ஆண்டு உடல்நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.