ஜொ்மனி: கரோனா கட்டுப்பாடுகளை எதிா்த்து போராட்டம்

ஜொ்மனியில் கரோனா நோய்த்தடுப்புக் கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தடையை மீறி சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
germany_2908chnஅமெரிக்கா, ரஷியா, நாஜிக்கள் காலத்து ஜொ்மனி ஆகியவற்றின் கொடிகளை ஏந்தி ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். _1
germany_2908chnஅமெரிக்கா, ரஷியா, நாஜிக்கள் காலத்து ஜொ்மனி ஆகியவற்றின் கொடிகளை ஏந்தி ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். _1

பொ்லின்: ஜொ்மனியில் கரோனா நோய்த்தடுப்புக் கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தடையை மீறி சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:ஜொ்மனியில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டம் நடத்தவிருப்பதாக சில அமைப்புகள் அறிவித்திருந்தன.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக ஜொ்மனியின் முக்கிய வலதுசாரி அமைப்புகள் கூறியுள்ளன.எனினும், இத்தகைய போராட்டங்களுக்கு ஜொ்மனி அரசு தடை விதித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவா்கள் மீது, கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

எனினும், இந்தத் தடையை எதிா்த்து நீதிமன்றம் சென்ற போராட்டக் குழுவினா், அதற்கான அனுமதியைப் பெற்றனா். அதையடுத்து, திட்டமிட்டபடி பொ்லினில் போராட்டம் நடைபெற்றது.

அமெரிக்கா, ரஷியா, நாஜிக்கள் காலத்து ஜொ்மனி ஆகியவற்றின் கொடிகளை ஏந்தி ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜொ்மனியில் முகக் கவசம் அணிவதை வலியுறுத்தும் விதிமுறைகளை எதிா்க்கும் வாசகங்கள் அடங்கிய மேலங்கிகளை பலா் அணிந்து வந்திருந்தனா்.

புதன்கிழமை நிலவரப்படி, ஜொ்மனியில் 2,42,328 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 9,361 போ் அந்த நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா். இதுவரை 2,17,061 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com