மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாய்லாந்தில் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு

தாய்லாந்தில் கடந்த 2 வாரங்களாகப் பெய்து வந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

News image
தாய்லாந்தில் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு
Updated On :8 டிசம்பர் 2020, 9:16 am

DIN

தாய்லாந்தில் கடந்த 2 வாரங்களாகப் பெய்து வந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் நகோன் சி தம்மரத் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை வெள்ளபாதிப்பு குறித்து தேசிய பேரிடர் தடுப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதன்படி இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாகாணங்களில் உள்ள 101 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 4,130 கிராமங்களில் மொத்தம் 5,55,194 வீடுகள் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளன. 

சூரத் தானி, பட்டாலுங், சாங்ஹ்லா, சம்பன், கிராபி, டிராங், சாத்துன், யலா, பட்டானி, நாராதிவத் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.