உலகின் மிகவும் வயதான பாண்டா கரடி மரணம்

சீன மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்த 38 வயதான பாண்டா கரடி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் வயதான பாண்டா கரடி மரணம்
உலகின் மிகவும் வயதான பாண்டா கரடி மரணம்

சீன மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்த 38 வயதான பாண்டா கரடி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியில் உள்ள மிருகக்காட்சிசாலையில் உலகின் வயதான ஜின்க்சிங் எனப்படும் பாண்டா கரடி பராமரிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி உடல்நிலை மோசமடைந்த பாண்டா கரடி மூச்சுத் திணறல், இருமல் மற்றும் வயிற்று பாதிப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தது. தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

செரிமானக் கோளாறுகளால் சுவாசக் குழாய்களில் தொற்று பாதிப்புக்குள்ளான பாண்டா கரடி டிசம்பர் மாத தொடக்கத்தில் இறந்தது.

மிருகக்காட்சிசாலையின் தொழில்நுட்ப இயக்குனர் யின் யாங்கியாங் உலகெங்கிலும் 30க்கும் மேற்பட்ட மாபெரும் பாண்டாக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழவில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com