வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜூன் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப் போகிறதா? - மீண்டும் மாயன் காலண்டர் சர்ச்சை

கரோனா அச்சுறுத்தலினால் உலகமே நிலைகுலைந்துள்ள நிலையில் வருகிற ஜூன் 21 ஆம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என்று மாயன் காலண்டர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. 

News image
Updated On :15 ஜூன் 2020, 8:37 am

DIN

கரோனா அச்சுறுத்தலினால் உலகமே நிலைகுலைந்துள்ள நிலையில் வருகிற ஜூன் 21 ஆம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என்று மாயன் காலண்டர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. 

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் கரோனா வைரஸ் பரவலினால் சுகாதாரத்துடன், பொருளாதார நிலையும் கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையில் பண்டைய மாயன் காலண்டர் வருகிற ஜூன் 21-ஆம் தேதியுடன் உலகம் அழியப் போவதாக கூறுகிறது. முன்னதாக, 2012- ஆம் ஆண்டும் இதேபோன்று உலகம் அழியப் போவதாக செய்திகள் வந்தன. பின்னர் அது பொய் என நிரூபிக்கப்பட்டது. 

தற்போது உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படுவது கிரிகோரியன் காலண்டர். இது 1582 இல் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்னதாக மக்கள் பல்வேறு காலண்டர்களை பயன்படுத்தினர். அதில் குறிப்பிடத்தக்கவை மாயன் மற்றும் ஜூலியன் காலண்டர். 

சூரியனைச் சுற்றுவதற்கு பூமிக்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை பொருத்து கிரிகோரியன் காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூலியன் காலண்டர்படி,  கிரிகோரியன் காலண்டரில் நாம் ஆண்டுக்கு 11 நாள்களை குறைவாக கணக்கிடுகிறோம் என்று கூறப்படுகிறது. 

அதன்படி, தற்போது நாம் இருப்பது 2020 ஆம் ஆண்டு அல்ல. உண்மையில் 2012 ஆம் ஆண்டு என்று கூறப்படுகிறது. 

அதாவது, 2020-1752 = 268 ஆண்டுகள்; ஆண்டுக்கு 11 நாள்கள் எனில், 268x11 =2948 நாள்கள்; 2948 /365 = 8.07 (தோராயமாக 8 ஆண்டுகள்) அதனால் 2020-8=2012.

இந்த கோட்பாட்டின்படி, டிசம்பர் 21, 2012 அன்று உலகம் அழியப் போவதாக கூறப்படுகிறது. தற்போதைய காலண்டர் கணக்கின்படி அது வருகிற ஜூன் 21, 2020. அதாவது உலகம் அழியப் போவதாக கூறப்படும் மாயன் காலண்டர் கூறியது வருகிற ஜூன் 21, 2020 என்று ஒரு விவாதம் எழுந்துள்ளது.

இதுகுறித்து நாசா ஆய்வாளர் ஒருவர் கூறும்போது, 'முன்னதாக சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் என்று கூறப்படும் 'நிபிரு' பூமியை நோக்கியைச் செல்வதாகவும் இதனால் உலகம் அழியும் என்று கூறப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டு, 2012 ஆம் ஆண்டில் உலகம் அழியும் என்று கூறப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் அதற்கான  அறிவியல் ஆதாரங்கள் இல்லை. அதேபோன்று இதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.