சீனாவில் கரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2,943 ஆக உயர்வு
சீனாவில் கரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று புதிதாக 125 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கிய பிறகு, ஒரு நாளில் இவ்வளவுக் குறைவான உயிரிழப்பும், குறைவான பாதிப்பும் நேற்றுதான் முதல் முறையாக பதிவாகியுள்ளது. இதுவே, சீனாவில் கரோனா வைரஸ் தாக்கம் மெல்ல குறைந்து வருவதன் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
உலக அளவில் கரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 3000 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,000 ஆகவும் உள்ளது.
சீனாவில் மட்டும் தற்போது 30,004 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 47,204 பேர் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...