இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனா: இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 756 பேர் பலி

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்று காரணமாக 756 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :30 மார்ச் 2020, 4:22 am

DIN

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்று காரணமாக 756 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முதலில் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் 722,196 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பால் கொவைட்-19 எனப் பெயரிடப்பட்ட அந்த நோய்த்தொற்று காரணமாக இதுவரை 33,976-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா். 

இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உலக மக்கள்தொகையில் சுமாா் மூன்றில் ஒரு பங்கினா் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் கரோனா வைரஸால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்று காரணமாக 756 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலியானர்களின் எண்ணிக்கை 10,779ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,689ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

அந்த நாட்டில் சுமாா் 142,178 லட்சம் பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.