ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சிங்கப்பூரில் காவலர்களை திட்டிய இந்தியருக்கு சிறைத் தண்டனை 

சிங்கப்பூரில், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு வலியுறுத்திய காவலரை தகாத வார்த்தைகளால் பேசிய இந்தியருக்கு 7 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 மே 2020, 7:12 am

PTI


சிங்கப்பூரில், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு வலியுறுத்திய காவலரை தகாத வார்த்தைகளால் பேசிய இந்தியருக்கு 7 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியது மற்றும் அவர்களது முகத்தை உடைத்து விடுவேன் என்று மிரட்டியது என இரண்டு பிரிவுகளின் கீழ் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியரான ரவி சின்னத்தம்பி சுப்ரமணியம் (53) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சென்ற போதும், தேநீர் கடை ஒன்றிலும் என இரண்டு முறை இவர் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டி, சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்றாமல் இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.

அதில்லாமல், ரவி சின்னத்தம்பி சுப்ரமணியம், தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பதும், அவர் மீதான வழக்குகளுக்கு ஒரு நீண்ட பட்டியலே இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சிறைத் தண்டனையுடன், அவருக்கு மன நல ஆலோசனை வழங்கவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.