ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

இவாங்கா டிரம்பின் தனி உதவியாளருக்கு கரோனா பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்டபின் தனி உதவியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 மே 2020, 7:38 am

PTI


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்டபின் தனி உதவியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெள்ளை மாளிகையைச் சேர்ந்த 3வது ஊழியருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பின் தனி உதவியாளராக இருந்த அவர் சில வாரங்களாக பணியில் இல்லை. அவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வீட்டில் இருந்தே பணியாற்றி வந்துள்ளார் என்றும், அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இவாங்கா மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்நெருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.