மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

‘2021 ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் நடைபெறும்’: ஒலிம்பிக் ஆணையம் உறுதி

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நிச்சயம் நடைபெறும் என பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்துள்ளார்.

News image

‘2021 ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் நடைபெறும்’: ஒலிம்பிக் ஆணையம் உறுதி

Updated On :12 நவம்பர் 2020, 11:28 am

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நிச்சயம் நடைபெறும் என பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்துள்ளார்.

உலகம்  முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் பரவலால் நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு கோடையில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருடம்  ஒத்திவைக்கப்படுவதாக  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் அவையில் பேசிய ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 2021இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் "ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் உறுதியாக உள்ளோம். கரோனா தொற்று நிலைகளுக்கேற்ப போதுமான பார்வையாளர்களுடன் போட்டிகள் நடைபெறும்" என்று பன்னாட்டு ஒலிம்பிக் தலைவர் தாமஸ் பாக் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஒலிம்பிக் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.