சட்டவிரோத நிதி தொடர்பான வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஹபீஸ் சயீது பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதி திரட்டி வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இதையடுத்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், லஷ்கா்-ஏ-தொய்பா ஆதரவாளர் ஹபீஸ் சயீது, பேராசிரியர் ஜாபர் இக்பால் மற்றும் யஹ்யா முஹாஜித் ஆகியோருக்கு லாகூர் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் தலா 10.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. ஹபீஸ் அப்துல் ரஹ்மானுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக ஜமாத்-உத்-தாவா அமைப்பினர் மீது இதுவரை 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதி ஹபீஸ் சயீத் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019 ஜூலை 17 ஆம் தேதி லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா நகருக்கு சென்று கொண்டிருந்த போது பயங்கரவாத தடுப்புப் படையினர் அவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் நூறு சாமி..! முதல்பார்வை போஸ்டர் அப்டேட்!

சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி

தம்மம்பட்டி சிவன் கோயிலில் பேவர் பிளாக் பூமி பூஜை விழா!

கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

