டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

2020 இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு: மூவருக்கு பகிர்ந்தளிப்பு

2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
நோபல் பரிசு
Updated On :6 அக்டோபர் 2020, 11:12 am

DIN

2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. 

கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான கணிப்பை கண்டறிந்ததற்காக ரோஜர் பென்ரோஸ்-க்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டறிந்ததற்காக ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ்-க்கும் வழங்கப்படுகிறது. 

ரோஜர் பென்ரோஸ்-க்கு விருதின் பரிசுத் தொகையில் 50 சதவீதமும், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தலா 25 சதவீதமும் வழங்கப்படுவதாக ராயல் ஸ்வேதிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் அறிவித்துள்ளது. 

முன்னதாக நேற்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வரும் தினங்களில் வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. 

நோபல் பரிசு

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும். 

இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் அக்.5, திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று மருத்துவத் துறைக்கும், இன்று இயற்பியல் துறைக்கும் நோபல் பரிசு ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.