மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாய்லாந்தில் பேருந்து மீது ரயில் மோதல்: 17 பேர் பலி

தாய்லாந்தில் பேருந்து மீது ரயில் மோதியதில் 17 பேர் பலியானார்கள். 

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:13 am

DIN

தாய்லாந்தில் பேருந்து மீது ரயில் மோதியதில் 17 பேர் பலியானார்கள். 

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சாச்சோயெங்சாவோ மாகாணத்தில் உள்ள புத்த கோயிலுக்கு பேருந்து இன்று சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்து கிலாங் கவீங் கிலன் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கிராசிங்கை இன்று காலை 8 மணியளவில் கடக்க முயன்றது. 

அப்போது அந்த வழியாக வந்த ரயில், பேருந்து மீது பயங்கரமாக மோதியது. மோதி வேகத்தில் பேருந்து தூக்கி எறியப்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் பலியானார்கள். 29 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பலர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.