ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா
ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசம்: ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்

கரோனா வைரஸ் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க பொது நிதியைப் பயன்படுத்துவதற்கான திட்டத்திற்கு ஜப்பான் அமைச்சரவை செவ்வாயன்று ஒப்புதல் அளித்தது.

கரோனா வைரஸ் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க பொது நிதியைப் பயன்படுத்துவதற்கான திட்டத்திற்கு ஜப்பான் அமைச்சரவை செவ்வாயன்று ஒப்புதல் அளித்தது.

கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா தடுப்பூசி தயாரிப்பதில் சீனா, இந்தியா, கனடா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

கரோனா தடுப்பூசி தயாரிக்கப்படும் பட்சத்தில் அதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனும் கோரிக்கையும் ஒருபக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க பொதுநிதியைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளது.

ஜப்பானின் பிரதமர் யோஹிஹைட் சுகா 2021ஆம் ஆண்டின் மத்தியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். 

பிரதம மந்திரி யோஷிஹைட் சுகா 2021 நடுப்பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸுக்கு போதுமான தடுப்பூசிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

ஜப்பான் தற்போது அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி மற்றும் ஃபைசர் இன்க் உள்ளிட்ட நிறுவனங்களிடம் தடுப்பூசியைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com