சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சிலியில் 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சிலியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அடுத்தடுத்த  சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

News image
சிலியில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Updated On :1 செப்டம்பர் 2020, 9:02 am

ANI

சிலியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அடுத்தடுத்த  சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில்,

சிலியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.09 மணியளவில் (சிலி நேரப்படி) 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கமானது வலேனருக்கு வடகிழக்கில் 78 கிலோமீட்டரில் மையத்தில் ஏற்பட்டது.

சில நிமிடங்களில் இரண்டாவது நிலநடுக்கமானது 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது தலைநகர் சாண்டியாகோ தெற்கே 1,330 கிலோமீட்டர் மையத்தில் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் வீட்டிற்குள் இருக்கும் பொருள்கள் விழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, மின்சார சேவைகள் அப்பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டது.

மேலும், சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி குறித்த எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.

சிலி, பசிபிக் பெருங்கடலில் உள்ள 'ரிங் ஆஃப் ஃபயர்' என்ற பகுதியில் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பால் பாதிப்புக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.