ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பாரீஸில் உள்ள உலகப் பிரபலமான ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News image

ஈபிள் கோபுரத்தின் முன் பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினர்

Updated On :23 செப்டம்பர் 2020, 1:04 pm

DIN

பிரான்சில் உள்ள உலகப் பிரபலமான ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரம் உலகின் மிகப் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஈபிள் கோபுரத்தைக் காண வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை பாரீஸ் காவல்துறைக்கு வந்த அடையாளமற்ற தொலைப்பேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு உள்ளதாக அச்சுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து  உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட அப்பகுதி முழுவதையும் காவல்துறையினர் சீல் வைத்தனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

பிரான்சில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலையொட்டி 104 நாட்களுக்குப் பின் ஜூன் 25 அன்று ஈபிள் கோபுரம் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.