மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பைடன் மருத்துவக் குழுவில் சர்ஜன் ஜெனரலாக மருத்துவர் விவேக் மூர்த்தி தேர்வு

அமெரிக்க அதிபர்(தேர்வு) பைடனின் மருத்துவக்குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி சர்ஜன் ஜெனரலாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

News image
மருத்துவர் விவேக் மூர்த்தி
Updated On :8 டிசம்பர் 2020, 10:48 am

DIN

அமெரிக்க அதிபர்(தேர்வு) பைடனின் மருத்துவக்குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி சர்ஜன் ஜெனரலாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

இந்திய - அமெரிக்க மருத்துவரான விவேக் மூர்த்தி அமெரிக்க பொது சுகாதார அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன்,  கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவக்குழுவை உருவாக்கியுள்ளார். இதில் இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தி மற்றும் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செலின் கவுண்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மருத்துவர் விவேக் மூர்த்தி, சர்ஜன் ஜெனரலாக பைடனின் மருத்துவக் குழுவில் இடம்பெறுகிறார். 

அமெரிக்க மருத்துவராக டாக்டர் விவேக் மூர்த்தி எபோலா மற்றும் ஸிகா வைரஸ்கள், ஓபியாய்டு நெருக்கடி மற்றும் அமெரிக்கர்களின் உடல், மன அழுத்தம், தனிமையின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல சுகாதார பிரச்னைகளுக்கு அவர் தீர்வு தந்துள்ளார். 

மேலும், டாக்டர் ரோசெல் வலென்ஸ்கி நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநராகவும், கரோனா செயல்பாட்டின் தலைவராக டாக்டர் மார்செல்லா நுனேஸ் ஸ்மித் ஆகியோரும் பைடன் குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.