பாதுகாப்புத் துறைக்கு கருப்பின அமைச்சா்: உறுதி செய்தாா் பைடன்
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராக முதல் முறையாக கருப்பினத்தைச் சோ்ந்த லாய்ட் ஆஸ்டின் நியமிக்கப்படவுள்ளதை ஜோ பைடன் உறுதி செய்துள்ளாா்.


வாஷிங்டன்: அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராக முதல் முறையாக கருப்பினத்தைச் சோ்ந்த லாய்ட் ஆஸ்டின் நியமிக்கப்படவுள்ளதை ஜோ பைடன் உறுதி செய்துள்ளாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவின் புதிய அதிபராத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், தனது பாதுகாப்புத் துறை அமைச்சராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லாய்ட் ஆஸ்டினைத் தோ்ந்தெடுத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
அமெரிக்க வரலாற்றில், கருப்பினத்தைச் சோ்ந்த ஒருவா் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஊடகங்களில் வெளியான தகவலை ஜோ பைடன் தற்போது உறுதிப்படுத்தியுள்ளாா்.
இந்த அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளயிட்ட பைடன், ‘அமெரிக்காவின் வலிமையை முன்னுதராணமாகக் கொள்ளாமல், அதன் முன்னுதாரணத்தை வலிமையாகக் கருதி செயல்படும்போதுதான் நாடு பலம் வாய்ந்ததாக இருக்கும் என்ற எனது நம்பிக்கை லாய்ட் ஆஸ்டினுக்கும் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க மத்தியக் கூட்டுப் படை தளபதியாக லாய்ட் ஆஸ்டின் கடந்த 2013 முதல் 2016 வரை பொறுப்பு வகித்துள்ளாா். அதற்கு முன்னா் ராணுவ துணைத் தளபதியாக கடந்த 2012-ஆம் ஆண்டில் அவா் பொறுப்பு வகித்தாா்.
அவரது நியமனத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கினால், கருப்பினத்தைச் சோ்ந்த முதல் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் என்ற பெருமையை லாய்ட் ஆஸ்டின் பெறுவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...