நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா: உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை 71,98,634 ஆக உயர்வு

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,198,634 ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :9 ஜூன் 2020, 3:57 am

DIN

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,198,634 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவின் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 215 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் உலக நாடுகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,198,634 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பலியானோர் எண்ணிக்கை 408,734 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,536,154 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 19,037 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 20,26,486 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 586 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 1,13,055 ஆக உயர்ந்துள்ளது. 

பிரேசிலில் ஒரே நாளில் 18,925 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 7,10,887 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் 4,76,658, ஸ்பெயினில் 2,88,797, பிரிட்டனில் 2,87,399 பேருக்கும், இத்தாலியில் 2,35,278, ஜெர்மனியில் 1,86,205, பெருவில் 1,99,696, துருக்கியில் 1,71,121, ஈரானில் 1,73,832, பிரான்ஸ் 1,54,188,   சீனாவில் 83,040 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.