வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் தேசிய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கித் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரின் ஆதரவாளர்களின் செயல்களுக்கு துணை அதிபர் மைக் பென்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை அடுத்து ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்று வந்தது.
அப்போது நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்தனர். டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதால் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி டிரம்ப் ஆதரவாளர்களை கலைக்க முயன்றனர். இதில் பலத்த காயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அரசியலிலும், மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்தி வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு துணை அதிரபர் மைக் டென்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கூறுகையில், அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களின் வன்முறையால், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை அங்கீகரிக்கும் சான்றிதழ் அளிப்பதில் பின்வாங்காப்படாது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

14-ஆவது முறையாக லீக் 1 கோப்பை வென்ற பிஎஸ்ஜி..! தொடர்ச்சியாக 5 முறை வென்று ஆதிக்கம்!

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!

சந்தேகப்பட்டவர்களை சதத்தால் அமைதியாக்கிய விராட் கோலி; முன்னாள் கேப்டன் பாராட்டு!

தந்தையான ஆதிக் ரவிச்சந்திரன்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

