மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துருக்கியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு

துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

News image
துருக்கியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு
Updated On :13 ஆகஸ்ட் 2021, 12:00 pm

DIN

துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கியின் கருங்கடல் பகுதியில்  உள்ள மாகாணங்களான பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் கடந்த புதன்கிழமை கனமழை பெய்தது.

இந்த கனமழையால் வீடுகள், பாலங்கள் இடிந்து பலத்த சேதம் ஏற்பட்டது. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் இந்த திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. 

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்புத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை 1700க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மேலும் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.