ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆப்கனில் விமானத்திலிருந்து கீழே விழுந்த விவகாரம்: அமெரிக்கா விசாரணை

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற அமெரிக்க விமானப்படையின் விமானத்தில் தொங்கியபடி சென்றவர்கள் பலியான விவாகாரத்தை விசாரிக்க கோரி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:32 am

DIN

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற அமெரிக்க விமானப்படையின் விமானத்தில் தொங்கியபடி சென்றவர்கள் பலியான விவாகாரத்தை விசாரிக்க கோரி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.

ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். மேலும், காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படையின் விமானத்தில் இடம் கிடைக்காததால் வெளிபுறத்தை பலர் தொற்றிக் கொண்டனர். தொடர்ந்து விமானம் புறப்பட்டதால், வானில் பறக்கும்போது கீழே விழுந்து 3 பேர் பலியாகினர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள அமெரிக்கா அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.