ஆஸ்திரேலியாவில் தீவிரமாகும் கரோனா: ஊரடங்கு நீட்டிப்பு
ஆஸ்திரேலியா மெல்போர்னில் டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவந்த நிலையில், அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியா மெல்போர்னில் டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவந்த நிலையில், அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வகை கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வரும் நிலையில், இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் மற்றும் அதை சுற்றியுள்ள விக்டோரியா மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு வியாழக்கிழமை முடிவுக்கு வரவிருந்தந்து. இந்நிலையில், ஊரடங்கை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பில்லை என மாநில பிரிமியர் டான் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஊரடங்கை திரும்பபெறலாம் என நினைத்தால் நீண்ட நாள்களாகவே கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஊரடங்குக்கு முன்பான சுதந்திரத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். மீண்டும் அந்த நாள்கள் திரும்பு வர வேண்டும் என தீவிரமாக விரும்புகிறோம்" என்றார். மெல்போர்னில் விதிக்கப்படும் ஆறாவது ஊரடங்கு இதுவாகும்.
இதையும் படிக்க | எங்கே தலிபான் தலைவா்?
விக்டோரியாவின் அண்டை மாநிலமான நியூ செளத் வேல்ஸில் 1,218 பேருக்கு இன்று கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜூன் மாதத்தின் மத்தியில் டெல்டா வகை பரவ தொடங்கியிதிலிருந்து இதுவரை 19,000 பேருக்கு இங்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி விநியோகம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அக்டோபர் மாதத்திற்குள், வயது வந்தோரில் 70 சதவிகிதத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...