/

காபூலில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி 

ஆப்கன் தலைநகரம் காபூலில் வெவ்வேறு இடத்தில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். 

News image

Afghanistan: Explosions in 4 provinces, 3 policemen killed

Updated On :10 பிப்ரவரி 2021, 9:20 am

ஆப்கன் தலைநகரம் காபூலில் வெவ்வேறு இடத்தில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். 

கார்ட்-இ-பர்வானில் இன்று காலை 8.55 மணியளவில் காபூல் விமான நிலையத்தை இணைக்கும் நான்கு வழிச் சாலையில் வாகனத்துடன் இணைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. 

இந்த குண்டு வெடிப்பில் வாகனத்திற்கு இருந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தனர். 

இதற்கு முந்தைய நாள் போலீஸ் மாவட்ட 2-இன் கார்ட்-இ-அரியானாவில் மற்றொரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர். 

வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. 

செவ்வாய்க்கிழமை, தலைநகரில் கிராம மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊழியர்கள் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நகர காவல்துறை மாவட்டம் 5இல் உள்ள பாக்-இ-தௌவுத் பகுதியில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.