கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகளவில் கரோனா பாதிப்பு 9.43 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.43 கோடியாக உயர்ந்துள்ளது. 
Published on

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.43 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சனிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,43,07,159 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 20,17,757 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,73,41,005 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,49,48,397 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,11,481 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்‍காவில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,41,02,429 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 4     லட்சத்து 1 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.
    
2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1 கோடியே 5 லட்சத்து 43 ஆயிரத்து 659க்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர். 

3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 83 லட்சத்து 94 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளதோடு, 2 லட்சத்து 8 ஆயிரத்து 291- க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com