உலகளவில் கரோனா பாதிப்பு 10.08 கோடியைக் கடந்தது
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10.08 கோடியாக உயர்ந்துள்ளது.


உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10.08 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 10,08,22,401 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 21,66,950 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 7,28,37,496 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,58,15,532 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,10,171 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,60,11,222 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,06,90,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,53,751 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,36,590 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 2,18,918 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கரோனா பாதிப்பு 5 கோடியை எட்டியது, மேலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சுமார் இரண்டரை மாதங்களில் இரட்டிப்பாகியது.
உலகளவில் தொற்று பாதிப்பில் அமெரிக்காவில் கால் பங்கிற்கு மேலாகவும், உயிரிழப்பில் 20 தகவீதமாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...