பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து ஜூலை 17ஆம் தேதி கிளம்பும் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்புமாறு கபூலில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதையடுத்து, தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
அங்கு நிலைமை மோசமாவதை அடுத்து, தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை 17ஆம் தேதி பிரான்ஸுக்கு சிறப்பு விமானம் இயக்கப்படும் எனவும், அதில் பிரான்ஸ் மக்கள் நாடு திரும்பும் மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பணியாளர்களை ராணுவ விமானம் அனுப்பி இந்திய அரசு திரும்ப அழைத்து வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டுள்ள தங்களது படைகளை ஆகஸ்ட் இறுதிக்குள் முழுமையாக வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், தலிபான் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பல முக்கிய இடங்களை தலிபான்கள் கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தை விரிவாக்கி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


