/

ஜெர்மனியில் திடீர் வெள்ளம்: பலர் மாயம்

ஜெர்மனியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image

ஜெர்மனியில் திடீர் வெள்ளம்

Updated On :15 ஜூலை 2021, 9:33 am

ஜெர்மனியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஜெர்மனி நாட்டின் ஷுல்ட் என்ற நகரில் பெய்து வரும் கனமழையால் நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் 6 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய பலரை ராணுவ உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். இதுவரை 30 பேர் காணவில்லை என காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.