கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியா செல்ல மூன்றாண்டு தடை: செளதி அரேபியா அதிரடி

சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்ல செளதி அரேபியா  அந்நாட்டு மக்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜூலை 2021, 6:24 am

DIN

சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்ல செளதி அரேபியா அந்நாட்டு மக்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இருப்பினும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உலக நாடுகள் தளர்வுகளை அறிவித்துவருகிறது.

இந்நிலையில், பெருந்தொற்றை கட்டுப்படுத்த சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்வதை தடுக்க செளதி அரேபியா அந்நாட்டு மக்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "விதிகளை மீறி செல்பவர்கள் சட்டப்பூர்வமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்றுவிட்டு செளதி அரேபியா  திரும்பும்போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி அவர்கள் பயணம் மேற்கொள்வதற்கு மூன்றாண்டு தடை விதிக்கப்படும்.

கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வராத அல்லது புதிய வகை வைரஸ் பரவி வரும் நாடுகளுக்கு நேரடியாக அல்லது வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்தோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோபியா, இந்தியா, இந்தோனேஷியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு செல்ல செளதி அரேபியா  தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.