ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

18 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் செளதி அரேபியா

18 மாதங்களுக்குப் பிறகு செளதி அரேபியா அரசு ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் சுற்றுலாத் தலங்களைத் திறக்க உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஜூலை 2021, 11:28 am

DIN

18 மாதங்களுக்குப் பிறகு செளதி அரேபியா அரசு ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் சுற்றுலாத் தலங்களைத் திறக்க உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 18 மாதங்களாக செளதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் சுற்றுலாவை தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மீண்டும் சுற்றுலாத் தலங்களை அந்நாட்டு அரசு திறக்க உள்ளது. 49 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளைச்  சேர்ந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கி செளதி அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சிவப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளுக்கு சென்ற குடிமக்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிப்பதற்கான அறிவிப்பை கடந்த வாரம் செளதி அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.