'தடுப்பூசி போடாவிட்டால் இந்தியாவுக்குச் செல்லுங்கள்'
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ சென்று விடுங்கள் என்று தங்கள் நாட்டு மக்களை மிரட்டும் தொணியில் பேசி பிலிப்பின்ஸ் அதிபர் சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.


தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ சென்று விடுங்கள் என்று தங்கள் நாட்டு மக்களை மிரட்டும் தொணியில் பேசி பிலிப்பின்ஸ் அதிபர் சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
பிலிப்பின்ஸில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக மெதுவாகச் செல்வதால் அதிருப்தி அடைந்த அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை சிறையில் அடைப்பேன் என்றும் அல்லது விலங்குகளுக்கு செலுத்தப்படும் மருந்தான ஐவர்மெக்டின் என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தி விட உத்தரவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் பேசிய நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்களை சிறையில் அடைத்துவிடுவேன்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் என்றால் இந்தியாவுக்குச் சென்றுவிடுங்கள். அல்லது அமெரிக்காவில் எங்காவது போய்விடுங்கள். ஆனால் இங்குதான் இருக்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் மனிதர்கள். உங்களால் கரோனா வைரஸை பரப்ப முடியும். எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார்.
பிலிப்பின்ஸ் அதிபரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...