உலகளவில் கரோனா பாதிப்பு 11.62 கோடியைத் தாண்டியது
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.62 கோடியாக அதிகரித்துள்ளது.


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.62 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சீனாவிலிருந்து பரவிய கரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், ஐரோப்பா-அமெரிக்க நாடுகளில் மோசமான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11,62,16,580 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 25,81,649 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,18,84,249 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,17,50,682 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 89,747 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,95,26,086 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 636-ஆக உயர்ந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் 64,307 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,993 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,11,73,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,57,548 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,96,506 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 74,285 பேருக்கு தொற்று பாதிப்பும், 1,786 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,61,188 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 1,88,866 பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...