/

உலகளவில் கரோனா பாதிப்பு 12.18 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.18 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 26.92 லட்சமாக அதிகரித்துள்ளது. 

News image
உலகளவில் கரோனா பாதிப்பு 12.18 கோடியைத் தாண்டியது
Updated On :27 ஜனவரி 2024, 7:46 pm

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.18 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 26.92 லட்சமாக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வரும் நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 12,18,17,583 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 26,92,699 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,82,06,646 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,09,18,238 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 88,955 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,02,94,798  கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5 லட்சத்து 50 ஆயிரத்து 649-ஆக உயர்ந்துள்ளது. நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் 62,794 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,288 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,14,74,302 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,59,250 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,17,00,431 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 90,830 பேருக்கு தொற்று பாதிப்பும், 2,736 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,84,775 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 1,95,908 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.