கரோனாவிலிருந்து குணமடைய பாகிஸ்தான் பிரதமருக்கு மோடி வாழ்த்து
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக அவரது சிறப்பு உதவியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பதிவில், “கரோனா பாதிப்பிலிருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வியாழக்கிழமை சீனாவின் சைனோஃபாா்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை இம்ரான் கான் செலுத்திக்கொண்டார்.
தடுப்பூசி போட்ட இரண்டு நாள்களில் தற்போது அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...