அத்துமீறிய இந்திய நீா்மூழ்கிக் கப்பல் தடுத்து நிறுத்தம்: பாகிஸ்தான் ராணுவம்
தங்கள் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இந்திய நீா்மூழ்கிக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.


தங்கள் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இந்திய நீா்மூழ்கிக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்நாட்டு ராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் அத்துமீறி நுழைய முயன்றது. அதனை பாகிஸ்தான் கடற்படை கண்டறிந்து தடுத்து நிறுத்தியது. பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் நுழைய முயன்றது முன்கூட்டியே கண்டறியப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது இது மூன்றாவது முறை. ஏற்கெனவே 2016-ஆம் ஆண்டு நவம்பரிலும் 2019--ஆம் ஆண்டு மாா்ச்சிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன’’ என்று தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் இந்திய நீா்மூழ்கிக் கப்பல் அத்துமீறி நுழைய முயன்ாகக் கூறப்படும் சம்பவத்தின் காணொலியையும் அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ளது.
எனினும் இதுகுறித்து இந்திய கடற்படை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...