காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

‘உலகத்தை மீட்பதற்கான வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டு விட்டன’: ஐநா கவலை

கரோனா பேரிடருக்குப் பிறகு உலகை மீட்பதற்கான வாய்ப்புகளை சர்வதேச நாடுகள் வீணடித்துவிட்டதாக ஐக்கிய நாடுகள அவை கவலை தெரிவித்துள்ளது.

News image
‘உலகத்தை மீட்பதற்கான வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டு விட்டன’: ஐநா கவலை
Updated On :26 அக்டோபர் 2021, 3:23 pm

DIN

கரோனா பேரிடருக்குப் பிறகு உலகை மீட்பதற்கான வாய்ப்புகளை சர்வதேச நாடுகள் வீணடித்துவிட்டதாக ஐக்கிய நாடுகள அவை கவலை தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் குறித்த சிஓபி26 மாநாடு இந்த மாத இறுதியில் கிளாஸ்கோவில் தொடங்க உள்ளது. அதிகரித்துவரும் காலநிலை மாற்ற சிக்கல்கள் குறித்தும், உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது, 

இந்நிலையில் கார்பன் வெளியீடு தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் காலநிலை மாற்றத்துக்கு எதிரான உறுதிமொழிகளை உலகநாடுகள் பின்பற்றாவிட்டால் புவிவெப்பநிலை உயர்வால் ஏற்படப்போகும் பேரிடர்களை தவிர்க்க முடியாது என எச்சரித்துள்ளது.

உலகநாடுகள் வழங்கியுள்ள தற்போதைய காலநிலை மாற்றத்திற்கான உறுதிமொழிகளின் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் வெறும் 7.5 சதவிகிதம் கார்பன் அளவை மட்டுமே குறைக்க முடியும் என தெரிவித்துள்ள ஐநா புவி வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்க 45 சதவிகித கார்பன் அளவை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தற்போது உலகின் 100 நாடுகள் இந்த நூற்றாண்டின் மத்தியில் பூஜ்ய கார்பன் வெளியீடு குறித்த உறுதிமொழியை வழங்கியிருந்தாலும் அவர் காலநிலை மாற்றத்தால் உண்டாகும் பேரிடர்களைத் தடுக்க உதவப்போவதில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் சூழலியல் திட்டத்தின் இயக்குநர் இங்கர் ஆண்டர்சன், “காலநிலை மாற்றம் என்பது எதிர்கால பிரச்னை அல்ல. அது தற்போது நடந்து வரும் பிரச்னை. புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்த பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்க எட்டு வருடங்கள் உள்ளன.

இந்த எட்டு ஆண்டுகளில் சரியான திட்டங்களை உருவாக்கி, கொள்கைகளை வகுத்து, அவற்றைச் செயல்படுத்தினால் காலநிலை மாற்ற பாதிப்பை குறைக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கங்களின்போது கார்பன் உமிழ்வு சுமார் 5.4% குறைந்தது. ஆனால் பொருளாதார மீட்புக்கான செலவில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே கார்பனை குறைக்கும் முயற்சிகளுக்கு உதவியது. கரோனாவிற்கு பிறகு உலகத்தை மீட்பதற்கான வாய்ப்புகளை உலக நாடுகள் வீணடித்து விட்டன” என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.