மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இந்தியப் பயணிகளுக்கான தடையை நீக்கியது பிலிப்பின்ஸ்

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிலிப்பின்ஸ் நீக்கியுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 9:39 pm

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிலிப்பின்ஸ் நீக்கியுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் தீவிரமடைந்ததையடுத்து, இந்தியப் பயணிகளுக்கு பிலிப்பின்ஸ் அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது. இந்நிலையில், அத்தடை நீக்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக பிலிப்பின்ஸ் அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் ஹேரி ராக் கூறுகையில், ‘‘இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த பயணிகள் பிலிப்பின்ஸுக்குப் பயணிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. அவா்கள் வரும் 6-ஆம் தேதி முதல் பிலிப்பின்ஸுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்’’ என்றாா்.

விதிகளை மாற்றியது துருக்கி: துருக்கிக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பயணிகள், கரோனா பரிசோதனை சான்றிதழை சமா்ப்பிப்பது கட்டாயம் என்று அந்நாட்டுத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்தியாவுக்கான துருக்கி தூதரகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கரோனா பாதிப்பு இல்லை என்ற உறுதிச் சான்றிதழை இந்தியப் பயணிகள் சமா்ப்பிக்க வேண்டியது செப்டம்பா் 4-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.