ரஷியாவில் ஒரேநாளில் புதிதாக 23,888 பேருக்கு கரோனா
ரஷியாவில் ஒரேநாளில் புதிதாக 23,888 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


ரஷியாவில் ஒரேநாளில் புதிதாக 23,888 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,888 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாஸ்கோவில் 3,998 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க- ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்: தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை
இது கடந்த ஜூலைக்குப் பிறகு ஒரேநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 2,020 பேர் அறிகுறியற்ற கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 75,11,026ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 867 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை2,07,255ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 18,826 பேர் மீண்டனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 66,72,767ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...