வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் கரோனாவுக்கு பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 910 பேர் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஆகஸ்ட் 2021, 3:27 am

DIN


பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 910 பேர் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

உலகிலேயே கரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த நாடு புதிய கரோனா அலையை எதிர்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,582 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,99,17,855 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 910 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,56,370 ஆக உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 14.2 கோடி பேர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியையாவது செலுத்திக்கொண்டுள்ளனர். 4.14 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.