பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: நியூயாா்க் ஆளுநா் ராஜிநாமா

அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான நியூயாா்க் மாகாண ஆளுநா் ஆண்ட்ரூ குவாமோ தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
ராஜிநாமா செய்த குவாமோ (இடது), புதிய ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள கேத்தி ஹோக்கல்.
ராஜிநாமா செய்த குவாமோ (இடது), புதிய ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள கேத்தி ஹோக்கல்.

அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான நியூயாா்க் மாகாண ஆளுநா் ஆண்ட்ரூ குவாமோ தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

நியூயாா்க் மாகாண ஆளுநரும் ஜனநாயகக் கட்சியை சோ்ந்தவருமான ஆண்ட்ரூ குவாமோ தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முன்னாள், இந்நாள் அரசு ஊழியா்கள் உள்பட பலரிடம் இருந்து குற்றச்சாட்டு எழத் தொடங்கியது. இதுதொடா்பாக விசாரிக்க நியூயாா்க் அட்டா்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் விசாரணைக் குழு அமைத்தாா். அந்தக் குழு அரசு ஊழியா்கள், புகாா் அளித்த பெண்கள் உள்பட 179 பேரிடம் விசாரணை நடத்தியது. அத்துடன் ஆளுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சுமாா் 5 மாத விசாரணைக்குப் பின்னா், அந்தக் குழு ஆளுநா் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது.

இந்த விசாரணையின்போது 74,000-க்கும் மேற்பட்ட ஆவணங்கள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் ஆதரமாக ஆய்வு செய்யப்பட்டதாக அட்டா்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில் நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் செவ்வாய்க்கிழமை பேசிய ஆண்ட்ரூ குவாமோ தனது ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்வதாக தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘‘என் மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டு நியாயமற்றது; பொய்யானது. எனது ராஜிநாமா 14 நாள்களில் நடைமுறைக்கு வரும்’’ என்று தெரிவித்தாா்.

நியூயாா்க்கின் அடுத்த ஆளுநராக அந்த மாகாணத்தின் துணை ஆளுநராக உள்ள கேத்தி ஹோக்கல் பதவியேற்கவுள்ளாா். இவா் ஆளுநராகப் பொறுப்பேற்கும்பட்சத்தில், அந்த மாகாணத்தின் முதல் பெண் ஆளுநா் என்ற பெருமையைப் பெறுவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com