
கோப்புப்படம்
ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பின்படி தானே நாட்டின் காபந்து அதிபர் என துணை அதிபர் அம்ருலா சாலே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அம்ருலா சாலேவின் ட்விட்டர் பதிவு:
"ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பின்படி அதிபர் ராஜிநாமா செய்தாலோ, தப்பியோடினாலோ, உயிரிழந்தாலோ துணை அதிபரே காபந்து அதிபராகிவிடுவார். தற்போது நான் நாட்டில்தான் உள்ளேன். எனவே, சட்டப்படி நான்தான் காபந்து அதிபர். அனைத்துத் தலைவர்களிடமும் நான் ஆதரவைக் கோரவுள்ளேன்."
இதையும் படிக்க | பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம்
ஏற்கெனவே, ஒருபோதும் தலிபான்களுக்குத் தலைவணங்க மாட்டேன் என அவர் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். தலிபான்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.