பசியில் வாடும் ஏமன்: நிதியுதவியை குறைக்கும் ஐநா

நிதிப்பற்றாக்குறை காரணமாக ஏமன் நாட்டுக்கு வழங்கி வந்த நிதியுதவியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நிதிப்பற்றாக்குறை காரணமாக ஏமன் நாட்டுக்கு வழங்கி வந்த நிதியுதவியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏமன் குடியரசு, மேற்கு ஆசியாவில், அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் கடந்த சில வருடங்களாக பஞ்சம் நிலவி வருகிறது. போதிய உணவின்றி மக்கள் தவித்துவரும் நிலையில் தற்போது பஞ்சம் உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் உணவு திட்டத்தின் கீழ் அண்டை நாடுகளின் உதவியால் அந்நாட்டிற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் உணவுதிட்டத்திற்கு போதிய நிதி இல்லாததால் மக்களுக்கு வழங்கப்படும் உணவிற்கான நிதி குறைக்கப்பட உள்ளதாக ஐநா தெரிவித்திருந்தது. மேலும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் ஏமனுக்கு நாட்டிற்கு தேவைப்படும் 385 கோடி அமெரிக்க டாலர்கள் நிதியை உலக நாடுகள் வழங்க முன்வரவேண்டும் எனக் கோரியிருந்தார்.

அடுத்த ஆண்டு மே மாதம் வரை உணவுத் தேவைக்காக ஏமன் நாட்டிற்கு 8.13 கோடி அமெரிக்க டாலர்களும், 2022இல் இவையே 197 கோடி அமெரிக்க டாலர்களும் தேவை என உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து இணைந்து நடத்திய மெய்நிகர் உறுதிமொழி மாநாட்டில் 170 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே வழங்கப்பட்டது.

இதன்காரணமாக உணவுத் தேவைக்காக ஏமனுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்திய ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிவரங்களின்படி, 1.6 கோடிக்கும் அதிகமான ஏமன் மக்கள் பட்டினியை எதிர்கொள்ள உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏமன் மக்கள் இப்போது முன்பை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர், இடைவிடாத பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் தத்தளித்து வருகின்றனர் உலக நாடுகள் இந்தப் பேரழிவைத் தடுக்க எங்களுடன் இணைந்து பணியாற்றுவது அவசியத் தேவை என உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com