மீண்டும் மாயமான வடகொரிய அதிபர்: உடல்நிலை காரணமா?

வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் ஒரு மாதத்திற்கும் மேலாக பொது வெளியில் தோன்றாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் ஒரு மாதத்திற்கும் மேலாக பொது வெளியில் தோன்றாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிரபலமானவர். அமெரிக்க அரசுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மூலம் முக்கிய கவனம் பெற்று வரும் கிம் ஜாங் உன் அவ்வப்போது பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வருவது வழக்கத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வடகொரியாவின் ராணுவ கண்காட்சியில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன் அதற்கு பிறகு எத்தகைய பொதுவெளியிலும் தோன்றாமல் உள்ளது அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை எழுப்பி வருகிறது. 

உடல்நல பாதிப்பு காரணமாக அவர் பொதுவெளியில் தோன்றுவதைத் தவிர்த்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றன.

இருப்பினும் இதனை மறுத்துள்ள வடகொரியா அலுவல் பணிகளின் காரணமாக அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள கிம் ஜாங் உன்னின் தந்தையும், வடகொரிய முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் நினைவு தின நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் கலந்து கொள்வார் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு 6 வார காலம் பொதுவெளியில் கிம் ஜாங் உன் தோன்றாமல் இருந்தது பல்வேறு வதந்திகளுக்கு வித்திட்ட நிலையில் அதற்குப் பிறகு ஊன்றுகோல் உதவியுடன் அவர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com