தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு புதிய சிக்கல்: பாகிஸ்தான் அதிரடி

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு பொது இடங்களில் நுழைய தடை விதித்து பாகிஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு புதிய சிக்கல்: பாகிஸ்தான் அதிரடி
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு புதிய சிக்கல்: பாகிஸ்தான் அதிரடி

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு பொது இடங்களில் நுழைய தடை விதித்து பாகிஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன. தொற்று பரவலைத் தடுக்க அனைத்து தரப்பு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிர்த்துவரும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் பொதுஇடங்களான வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் நுழையத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்டுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா பரவலில் இருந்து தப்பிக்க மக்கள் முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிக்க மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தகுதி வாய்ந்த மக்கள் அரசின் அறிவிப்பை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com